ETV Bharat / entertainment

சென்னையில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் கார்த்தி ரசிகர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 10:18 PM IST

Karthi Fans Club giving Food in Chennai: கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படத்தின் வெற்றிக்காக 25 நாட்களுக்கு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வ்ழங்கும் பணியை அவரது ரசிகர்கள் சென்னையில் தொடங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'(Japan). கார்த்தியின் 25ஆவது திரைப்படமான இப்படத்தை கொண்டாடும் வகையில், அவருடைய ரசிகர்கள் 25 நாட்களுக்கு தினமும் ஆயிரம் பேர்கள் வீதம் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் இன்று (அக்.17) இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குனர் ராஜு முருகன் ஆகியோர் இணைந்து இந்த அன்னதானத்தைத் தொடங்கி வைத்தனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் 'ஜப்பான்'. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு என உணவு வழங்க திட்டமிட்டனர்.

அதன்படி, அக்.17ஆம் தேதியான இன்று தொடங்கி, 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவினை பரிமாற இருக்கிறார்கள். 'பசித்த வயிறுக்கு உணவிட வேண்டும்' என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தைக் கண்டு, யாரேனும் ஒருவர் பசித்த ஒருவருக்கு உணவு வழங்கினாலும் கார்த்தியின் நோக்கம் வெற்றி பெறும் என கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் மற்றும் 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிக்கும் 25 வது படமான 'ஜப்பான்' படத்தின் வெற்றிக்காக, 25 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை முன்னெடுத்ததற்காக திரையுலகினரும், ரசிகர்களும் கார்த்தி மற்றும் அவருடைய மக்கள் நல மன்றத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லியோ படத்திற்கான அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.