நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று(ஜூன் 21) நடிகர் ரஜினிகாந்த், ”கேப்டன் மீண்டும் பழைய கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.