ETV Bharat / entertainment

கமல்ஹாசனின் எதிர்பார்க்காத கூட்டணி… 237வது படத்தை இயக்கும் அன்பறிவு! - tamil cinema news

KH237: கமல்ஹாசன் தயாரித்து, நடிக்கும் அவரது 237வது படத்தை சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு இயக்கவுள்ளனர்.

237வது படத்தை இயக்கும் இரட்டையர்கள்
237வது படத்தை இயக்கும் இரட்டையர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 10:57 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி சண்டைப் பயிற்சியாளர்களாக உருவெடுத்தவர்கள், இரட்டையர்களான அன்பறிவு. பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் இவர்களின் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அன்பறிவு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், அன்பறிவு கேஜிஎப் முதல் பாகத்திற்காக தேசிய விருது பெற்றனர்.

தற்போது கல்கி, இந்தியன் 2, வேட்டையன், தக் லைஃப் என மிகவும் பிஸியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 237வது படத்தை இந்த இரட்டையர்கள் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து, இந்தியன் 2ஆம் பாகம் மற்றும் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து, மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய 234வது படத்திற்கு தயாராகி வருகிறார்.

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் Thug life திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கமலுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கப்படும் 55வது படத்தை, சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு இயக்கவுள்ளனர். அன்பறிவு இயக்கும் இந்த படத்தின் கதையில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், அனிருத் இருவரும் நடிக்கவிருந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசன் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிரபாஸுடன் கல்கி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அயலான் எப்படி இருக்கு? சிவகார்த்திகேயனின் அயலான் ட்விட்டர் விமர்சனம் இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.