ETV Bharat / entertainment

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வுக்குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு - Karu Palaniyappan

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதின் தேர்வுக்குழு தலைவர், உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது
author img

By

Published : May 29, 2022, 12:07 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் 'கலைஞர் கலைத்துறை வித்தகர்' விருது குறித்து தமிழ்நாடு அரசு இன்று (மே 29) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது, ஜுன் 3ஆம் தேதி அன்று வழங்கப்படும் எனவும் அவ்விருதாளருக்கு நினைவுப்பரிசுடன் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை இந்தாண்டு ஜுன் 3ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, தகுதியான விருதாளரை தேர்வு செய்யும் வகையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், உறுப்பினர்களாக நடிகரும் நடிகர் சங்க தலைருமான நாசர், நடிகரும் இயக்குநருமான கரு. பழனியப்பன் ஆகியோர் பல்வேறு பரீசிலனைக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜுன் 3ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதி அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் திரையுலகிலும் திரைக்கதையாசிரியர், வசனக்கர்த்தா என பல துறைகளிலும் கோலோச்சியவர். எனவே, அவரின் பெயரில் அவரது பிறந்தநாள் அன்றே தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழ்நாடு அரசு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜானி டெப் மீது ஆம்பர் ஹெர்ட் வழக்கு: எலான் மஸ்க் கருத்து என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.