ETV Bharat / entertainment

புலியாகவும் பட்டாம் பூச்சியாகவும் மாறும் மனிதன்.. வெளியானது புலிமடா டிரெய்லர்..! - சினிமா செய்திகள்

pulimada movie trailer: ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புலிமாடா படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

Joju George new movie Pulimada trailer is out
புலிமடா டிரெய்லர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 10:22 PM IST

சென்னை: ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனைப் பற்றிய கதைதான் புலிமடா. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாக உள்ள இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே புலிமடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. புலிமடாவில் ஜோஜூ ஜார்ஜ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோமோல் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் பல நல்ல படங்களைக் கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி மற்றும் எடிட் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். முன்னதாக இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்த ஆண்டனி படத்தையும் ஐன்ஸ்டீன் மீடியா தயாரித்திருந்தது.

கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இரட்டா படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் புலிமடா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வெறும் 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டு படமாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் புலிமடா ஆகும்.

ஜெய் பீம் படத்திற்குப் பிறகு புலிமடா படத்தில் லிஜோமோலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமண நிகழ்வில் நடக்கும் நிகழ்வுகளும், அதன் மூலம் ஏற்படும் பிரச்னைகளை சுற்றி புலிமடா படம் நகர்கிறது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் பல சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார் இயக்குநர் ஏ.கே.சாஜன்.

புலிமடா படத்திற்கு இஷான் தேவ் இசையமைக்க, ரபிக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், மைக்கேல் பனச்சிகல் ஆகியோர் பாடல் வரிகள் எழுதி உள்ளனர். பின்னணி இசை அனில் ஜான்சன் அமைக்க, இயக்குநர் ஏ.கே.சாஜன் படத்திற்கு எடிட்யும் செய்துள்ளார். புலிமடா அக்டோபர் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரமாண்டமாக தயாராகும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.