ETV Bharat / entertainment

Jawaan opening day collections: பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த ஜவான்! - yogi babu

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம், பதான் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 1:20 PM IST

ஹைதராபாத்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நேற்று வெளியானது. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் இந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் நடித்த பிகில் படத்திற்கு பின், நான்கு ஆண்டுகளுக்கு கழித்து அட்லீ திரைப்படம் இயக்கி உள்ளார். அது மட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் கலை இயக்குநர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத் தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்டோர் தங்கள் திறமைகளை நிருபிக்க அட்லீ வழிவகை செய்துள்ளார். இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ஜவான் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இது குறித்து பிரபல சினிமா இணையதளம் சக்னில்க் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ஜவான் திரைப்படம் 75 கோடி வசூல் செய்துள்ளது. ஜவான் இந்தி மொழியில் மட்டும் 65 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தி மொழியில் மட்டும் 58.67% சதவீதம் பேர் ஜவான் படம் பார்த்துள்ளனர். முன்னதாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்திருந்தது.

YRF spy universe இன் கதை சார்ந்த படமான பதான் இந்திய அளவில் முதல் நாளில் 57 கோடி வசூல் செய்திருந்தது. (இந்தியில் மட்டும் 55 கோடி), பதான் படத்திற்கு பிறகு மீண்டும் ஜவான் படம் மூலம் ஷாருக்கான் பாலிவுட் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மேலும் ஒரே வருடத்தில் முதல் நாள் வசூலில் இரண்டு முறை 50 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர் என்ற சாதனையை ஷாருக்கான் தன் வசப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் டுங்கி திரைப்படம் டிசம்பரில் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: "ஒவ்வொரு ரசிகர் மன்றத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன்" - ஜவான் வெற்றியால் ஷாருக்கான் நெகிழ்ச்சி!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.