ETV Bharat / entertainment

Jailer: 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'காவாலா' லிரிக் வீடியோ! - பாடகி ஷில்பா ராவ்

கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

20 million views for kaavaalaa song
20 மில்லியன் பார்வைகளை கடந்த ஜெயிலர் ‘காவாலா’ லிரிக் வீடியோ
author img

By

Published : Jul 11, 2023, 1:30 PM IST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமாகும். இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகிறது. தற்பொழுது இப்படத்தின் ‘காவாலா’ லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘ஜெயிலர்’ படம் பான் இந்தியா வெளியீடாக தயாராகி உள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேட்ட, தர்பார் என சூப்பர் ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.

இதையும் படிங்க: முதல் நீ முடிவும் நீ .. "குட்நைட்" நடிகை மீதா ரகுநாத் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது எனப் படக் குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 6-ம் தேதி இந்த படத்தில் இருந்து ‘காவாலா’ என்கிற லிரிக் பாடல் வெளியானது. வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூப்பில் இந்த பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஸ்பாட்டிஃபையில் (spotify) இந்தப் பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது. அனிருத்தின் அதிரடி இசை, அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகள், பாடகி ஷில்பா ராவின் காந்தக் குரல் ரசிகர்களுக்கு புதுமையை அளித்துள்ளது.

தமன்னாவின் நளினமான நடனம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என மொத்தமாக சேர்ந்து இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தந்துள்ளது. தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

20 million views for kaavaalaa song
20 million views for kaavaalaa song

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ட்ரண்டிங் ரீல்ஸ் முழுவதும் காவாலா பாடலாகத்தான் உள்ளது. தமன்னாவின் நளினமான நடனம் மற்றும் அனிருத்தின் டிரேட் மார்க் இசை உள்ளிட்டவை பாடலை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தமிழிலும் தெலுங்கும் கலந்து எழுதப்பட்ட இதன் பாடல் வரிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். நிச்சயம் இப்பாடல் திரையரங்குகளில் கொண்டாட்டத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க: 'ஜவான்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..! அட்டகாச தோற்றத்தில் ஷாருக்... நம்ம அட்லீ படமா இது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.