இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் அட்டக்கத்தி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் காதல் கதை சார்ந்த படம் ஒன்றை இயக்கியுள்ளார்.


இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி காளிதாஸ் ஜெயராம் 'இனியன்' என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். துஷாரா விஜயன் ரேனியாகவும், கலையரசன் அர்ஜுனாகவும், ஷபீர் சகஸ் ரட்சகனாகவும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட்டில் தொடங்கும் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு?