சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர், இயக்குநர் ஷங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம், இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது.
-
A glimpse of dubbing 🎙️ session from INDIAN-2 🇮🇳 ft. Ulaganayagan @ikamalhaasan 🤗 & Director @shankarshanmugh 🎬
— Lyca Productions (@LycaProductions) October 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dubbing in Progress ███░░#Indian2 🇮🇳 @anirudhofficial @dop_ravivarman @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 pic.twitter.com/kGlMKbWcC1
">A glimpse of dubbing 🎙️ session from INDIAN-2 🇮🇳 ft. Ulaganayagan @ikamalhaasan 🤗 & Director @shankarshanmugh 🎬
— Lyca Productions (@LycaProductions) October 9, 2023
Dubbing in Progress ███░░#Indian2 🇮🇳 @anirudhofficial @dop_ravivarman @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 pic.twitter.com/kGlMKbWcC1A glimpse of dubbing 🎙️ session from INDIAN-2 🇮🇳 ft. Ulaganayagan @ikamalhaasan 🤗 & Director @shankarshanmugh 🎬
— Lyca Productions (@LycaProductions) October 9, 2023
Dubbing in Progress ███░░#Indian2 🇮🇳 @anirudhofficial @dop_ravivarman @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 pic.twitter.com/kGlMKbWcC1
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான போதும், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகே படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது எனலாம். அதன் பிறகும், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தாமதமானது.
இதனையடுத்து, அண்மையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி தைவான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், சென்னையில் செட் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ மூலம் அறிவித்துள்ளது. அதில் தற்போது கமல்ஹாசன் தொடர்பான காட்சிகளுக்கு டப்பிங் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து படத்தை வெளியிடும் முனைப்பில் படக்குழுவினர் உள்ளனர்.
கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார். 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். அதனைtஹ் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். தன்னை மிகவும் பிஸியான நடிகராக வைத்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
அதுமட்டுமின்றி தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன், சிம்பு நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார். மேலும் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் ஷங்கர் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ‘ஆண்டனி’ பட டீசர்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..