ETV Bharat / entertainment

செல்போன் மூலம் மியூசிக் கம்போசிங் நடத்திய இளையராஜா - கலாசார நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்! - Musician participation in cultural arts gathering

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக அரங்கத்தில் 34-வது அகில இந்திய மத்திய வருவாய் கலாசார கலை கூடல் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பங்கேற்று பேசினார். அப்போது தனது செல்போன் மூலம் மியூசிக் கம்போசிங்கை இளையராஜா நடத்தினார்.

'அனைவரையும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும்'- இளையராஜா

author img

By

Published : Feb 10, 2023, 9:59 PM IST

Updated : Feb 10, 2023, 10:54 PM IST

செல்போன் மூலம் மியூசிக் கம்போசிங் நடத்திய இளையராஜா - கலாசார நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்!

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூலகம் அரங்கத்தில் 34-வது அகில இந்திய மத்திய வருவாய் கலாசார கலை கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியை இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், நிகழ்ச்சியில் ரமா மேத்யூ (மறைமுக வரிகள் மற்றும் மத்திய வாரியம்), மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தமிழ்நாடு மண்டலத்தின் முதன்மை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய இளையராஜா: 34-வது அகில இந்திய மத்திய வருவாய் கலாசார கலை கூடல் நிகழ்ச்சியை, ஜனனி ஜனனி ஜகம் நீ என்னும் தன்னுடைய பாடலைப்பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

'அனைவரையும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும்'- இளையராஜா
'அனைவரையும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும்'- இளையராஜா

அப்போது மேடையில் பேசிய இளையராஜா, 'ஒரு சிற்பிக்கு எவ்வாறு தேவையில்லாத பாகங்களை நீக்கினால் மட்டுமே அதன் சிலை உருவாகுமோ, அதுபோல தேவையில்லாத தட்டுகளை நீக்கினால் மட்டுமே முறையான தாளம் உருவாகும். அதுபோல தன்னைப் பற்றி வரும் அவதூறு பேச்சுகளை நான் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை' என்றார்.

'மேலும், உங்கள் அனைவரும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்பது எனது ஆசை’ என்ற அவர் தனது ஸ்டுடியோவில் நடைபெறும் ரெக்கார்டிங்கினை அங்கிருந்து இருந்து போன் கால் மூலமாக கேட்க வைத்தார், இளையராஜா.

அனைவரையும் ஸ்டுடியோ அழைத்துச் செல்ல முடியாது என்பதால், மேடையில் இருந்து ஸ்டுடியோவில் நடைபெறும் ரெக்கார்டிங் நிகழ்ச்சியை போன் கால் மூலம் ஒளிபரப்பினார். அப்போது, 'உங்கள் அனைவரும் எனது ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது' என அவர் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரமா மேத்யூ: (மறைமுக வரிகள் மற்றும் மத்திய வாரியம்), ’2022-2023 ஆண்டுக்கான 34வது மத்திய வருவாய் அகில இந்திய கலாசார நிகழ்ச்சியை இந்த வருடம் நடத்தக்கூடிய கலை விழா வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வருடம் தோறும் நடக்கக் கூடிய நிகழ்ச்சி இந்த வருடம் சென்னையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் இசைஞானி ராஜா கலந்து கொண்டது எங்களுக்கு பெருமை" என்று கூறினார்.

இதையும் படிங்க:நடிகர் விஜயின் 'வாரிசு ஓடிடி ரிலீஸ்'... எப்போது தெரியுமா?

Last Updated : Feb 10, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.