ETV Bharat / entertainment

இளையராஜா எனும் இசை தூதன்! - இளையராஜா 80

இசையை எளிய மனிதர்களுக்கு கொண்டுசென்றதில் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான். அன்னக்கிளி தொடங்கி அக்கா குருவி வரை இந்த இசை ஊற்று வற்றாத ஜீவநதியாக இசை தாகம் எடுக்கும் எல்லோருக்கும் தாகம் தீர்த்து வருகிறது.

இளையராஜா எனும் இசை தூதன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

author img

By

Published : Jun 2, 2022, 6:37 AM IST

ஹைதராபாத்: பண்ணைபுரம் தந்த பாட்டு ஸ்வரம் இளையராஜா. இன்று (ஜூன்2) தனது 80ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்னக்கிளி தொடங்கி அக்கா குருவி வரை இந்த இசை ஊற்று வற்றாத ஜீவநதியாக இசை தாகம் எடுக்கும் எல்லோருக்கும் தாகம் தீர்த்து வருகிறது.

1400க்கும் மேற்பட்ட படங்கள், 5000க்கும் மேற்பட்ட பாடல்கள்; தமிழ் தொடங்கி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளவர் இளையராஜா. பொதுவாக இளமையில் முடியாது போனால் வேறு எப்போதும் முடியாது என்பார்கள்.

மச்சான பாத்தீங்களா?: ஆனால், சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதற்கு இளையராஜாவும் ஒரு எடுத்துக்காட்டு. ஒருதுறையில் சாதிக்க இளம் வயதிலேயே அதில் நுழைந்து தேர்ச்சி பெற்றால்தான் சாதிக்க முடியும் என்பதை உடைத்தவர் இளையராஜா. அன்னக்கிளி படத்திற்கு இசை அமைக்கும்போது அவருக்கு வயது 32.

ஆனாலும் சிறுவயது முதலே உள்ளூர் இசை முதல் கர்நாடிக், மேற்கத்திய இசை என அனைத்து இசை நுணுக்கங்களையும் நன்றாக கற்றுத்தேர்ந்தார். தனது 40களின் தொடக்கத்தில் அதாவது 1980களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தார்.

இசை பிதாமகன்: ஆரம்ப காலங்களில் பின்னணி இசை குறித்து அவ்வளவாக தெளிவில்லாமல்தான் இருந்துள்ளார். அதன்பிறகு தனது அயராத கற்றல் ஆர்வத்தால் பின்னணி இசையின் பிதாமகனாக உருவெடுத்தார். அதுமட்டுமின்றி இப்போதுவரை பாமர மக்கள் மற்றும் உழைப்பாளிகளின் தாலாட்டும் சங்கீதம் இளையராஜா மட்டுமே.

தங்களது கஷ்டங்களை மறந்து வேலை செய்ய உடனிருந்து ஊக்கம் கொடுப்பதும் இவரது இசையே. சிம்பொனி இசை அமைப்பு, பஞ்சமுகி என்ற கர்நாடக ராக உருவாக்கம் என இசையில் புதுமைகளை கண்டறிந்தது மட்டுமில்லாமல் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுவரை பெற்றுள்ளார்.

விருதுகளுக்கு பெருமை: மேலும் 5 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். இதுபோக பல சர்வதேச விருதுகளையும் குவித்துள்ளார். இப்படி சொல்வதைவிட இவரால் தான் விருதுகள் தன்னை பெருமைப்படுத்திக்கொண்டன எனலாம். மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட இளையராஜா, ரமணமகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகையை வழிபடுபவர்.

அதுமட்டுமின்றி இவர் இசைக் குறிப்புகளை தன் கைப்பட எழுதி அதனை வாசிப்பார். மிகச்சிலரே இவ்வாறு இசை அமைப்பவர்கள். தற்போது வரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

1,000ஆவது படம்: சில ஆண்டுகளுக்கு முன்பு, பாலா இயக்கத்தில் வெளியான ’தாரை தப்பட்டை’ திரைப்படம் இவரது 1000வது படம். இவரது பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். ஒருசில இயக்குனர்கள் இவரிடம் இருந்து பாடல்களை வாங்கிவிட்டு அதற்கு தகுந்தபடி கதை அமைத்து வெற்றியும் பெற்றுள்ளனர்.

உதாரணமாக ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் இப்படி உருவானதே. இன்னும் எத்தனையோ படங்களை சொல்லலாம். இவர், இன்னும் நீண்ட ஆயுள்வாழ்ந்து தமிழ் ரசிகர்களுக்கு இசை அமிர்தம் வழங்க வாழ்த்துவோம்.

இதையும் படிங்க: ’என் உயிரின் உயிரேவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ - ஹாரிஸ் ஜெயராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.