சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஆக.13) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே, இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆர்.கே. சுரேஷ், "விஜய் தேவரகொண்டா மிகவும் அருமையான நடிகர். அவரது அர்ஜுன் ரெட்டி படம் பார்த்துதான் இப்படத்தை தமிழில் வெளியிட முன்வந்தேன். இதுவும் ஒரு ’பான் இந்தியா’ படம். இந்தியா முழுவதும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது” என்றார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “தமிழ் ரசிகர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் நேரடி தமிழ் படமாக ’நோட்டா’வில் நடித்தேன். லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குனர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுடன் பேசியுள்ளேன். லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் படத்தில் நானும் நடிக்க ஆசை” என்றார்.
இதையும் படிங்க: பெரிய நடிகர்களுக்கே திரையரங்குகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன... சீமான்...