ETV Bharat / entertainment

பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன்.. முதலமைச்சரை மாமா என்றே அழைப்பேன்.. நடிகர் சுதீப் அதிரடி..

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பரப்புரை செய்யப்போவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

author img

By

Published : Apr 5, 2023, 5:34 PM IST

பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன்
பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 10ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பரப்புரையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜக வழக்கம்போல பிரபலங்களை தேர்தல் பரப்புரையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சுதீப் கிச்சா பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

நடிகர் சுதீப் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 5) நடிகர் சுதீப் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். அப்போது பேசிய சுதீப், "சிறுவயதில் முதலே எனக்கும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. சொல்லப்போனால், அவரை நான் மாமா என்றே அழைப்பேன்.

இதை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். முதலமைச்சர் பொம்மையின் கருணை மனப்பான்மைக்காக அவருடன் நிற்கிறேன். நான் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தால், முன்கூட்டியே சொல்லியிருப்பேன். ஆனால், நான் இவருக்கு ஆதரவாக மட்டுமே நிற்கிறேன். இந்த ஆதரவு அரசியலுக்காக அல்ல, தனிப்பட்ட மனிதருக்காகத்தான்.

சினிமாத்துறையில் எனக்கு காட்பாதர் என்று யாரும் கிடையாது. இருப்பினும், சிலரது ஆதரவு எனக்கு கிடைத்தது. அதில் பசவராஜ் பொம்மை முக்கியமானவர். இதை எனது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலை மதிக்கிறேன். ஆனால், அதற்கும், இங்கு நான் அமர்ந்திருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இவரது ஆதரவு குறித்து முதலமைச்சர் பொம்மை கூறுகையில், நடிகர் சுதீப் எனது நட்பை மதிப்பவர் மட்டுமே தவிர எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் கிடையாது. எனக்கு ஆதரவு அளிப்பதால், கட்சிக்கும் அளிக்க உள்ளார். வரும் தேர்தலில் எனக்காக பரப்புரை செய்வேன் என்று உறுதி அளித்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பைக் ரேஸில் இருந்து இருந்து அஜித் விலகியது ஏன்? - பயில்வான் ரங்கநாதன் கூறிய காரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.