ETV Bharat / entertainment

அப்பா எப்போதும் எந்த மனநிலையில் இருப்பார் என கணிக்க முடியாது - கார்த்திக் ராஜா! - tamil cinema news

karthik raja live in concert: மலேசியா இசை நிகழ்ச்சியில் அப்பா பாடுவாரா என்று கார்த்திக் ராஜாவிடம் கேட்டதற்கு “ அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளேன். அப்பாவின் மூட் வீட்டிலேயே எப்படி இருப்பார் என்று என்னால் சொல்ல முடியாது” என கூறியுள்ளார்

கார்த்திக் ராஜா
கார்த்திக் ராஜா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 9:37 PM IST

சென்னை: இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். டும் டும் டும், காதலா காதலா, உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இப்போது வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.

இந்த நிலையில் கார்த்திக் ராஜா அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு திருச்சியில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி மலேசியாவில் டும் டும் டும் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இதில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பாடகர்கள் பாட உள்ளனர். மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்கிறார்.

இசை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய கார்த்திக் ராஜா, “இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் எஸ் பாஸ் நிறுவனத்திற்கு முதல் நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தையும், பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக வருகிறார். கடந்த முறை மலேசியாவில் நிகழ்ச்சி நடந்த போது அந்நாட்டு மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தார்கள்.

எனக்கு மிகப் பெரிய மரியாதையாக இருந்தது. அதைவிட பெரிதாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அது சுலபமானதல்ல. அந்த வகையில் இவர்கள் சரியாக செய்து வருகின்றனர். எஸ் பாஸ் நிறுவனத்தை பாராட்ட வேண்டும்.

இசை நிகழ்ச்சியில் அப்பா பாடுவாரா என்ற கேள்விக்கு, அப்பாவின் மூட் வீட்டிலேயே எப்படி இருப்பார் என்று என்னால் சொல்ல முடியாது. அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளேன்.‌ அங்கு வைத்து சில பாடல்களை பாட சொல்லி கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசை” என்று கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை மானு, நடிகர் சதீஷ், பாடகி பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நடிகர் அஜித்தின் பைக் சுற்றுப் பயண நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.