ETV Bharat / entertainment

இவங்களைத் தான் திருமணம் செய்யப்போகிறேன்; போட்டோ வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் - போட்டோ வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவங்களைத் தான் திருமணம் செய்யப்போகிறேன்; போட்டோ வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

author img

By

Published : Oct 5, 2022, 9:09 PM IST

தமிழ் சினிமாவில் 'சாக்லெட் பாய்' ஹீரோக்களில் தனக்கென தனியிடம் பிடித்து நிலைத்து வருபவர், நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழச்சிக்கு பிறகு பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்து வரும் இவர், இன்று தனது வாழ்க்கை துணை குறித்த அறிவிப்பினை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள், அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.

இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தனக்கு மனைவியாக வரவிருக்கும் நர்மதா உதயகுமாரின் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை அவர் வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் இவரது கைதான், இவரது கைதான் என ஊகித்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவரே தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நர்மதா உதயகுமார், சொந்தமாக ”கிளிக்” எனும் பிராண்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

  • With all my heart, for all my life ❤️

    Im extremely happy to introduce 𝐍𝐚𝐫𝐦𝐚𝐝𝐚 𝐔𝐝𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫, my wife-to-be. Love you to bits 🤗❤️

    With God’s blessings, as we begin our forever, we seek double the love from you all, now & always pic.twitter.com/yNeHusULfY

    — Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: விரைவில் வருகிறதா ராட்சசன் 2?; அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.