ETV Bharat / entertainment

அரச பாணியில் திருமணம் செய்த நடிகை ஹன்சிகா - வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் - வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

நடிகை ஹன்சிகா அவரது காதலன் சோஹைல் கத்தூரியாவை டிச.4இல் ஜெய்ப்பூர் கோட்டையில் திருமணம் செய்து கொண்டதையடுத்து இவரது திருமணத்திற்குப் பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharatஅரச பாணியில் பிரம்மாண்ட திருமணம்  செய்த நடிகை ஹன்சிகா - வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

author img

By

Published : Dec 6, 2022, 3:11 PM IST

பாலிவுட் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு உள்பட பட மொழிகளின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இறுதியாக அவரது 50ஆவது படமாக மஹா வெளியானது.

கடந்த நவ.2அன்று அவரது காதலன் குறித்தும், திருமணம் குறித்தும் வெளிப்படையாக அறிவித்தார். பிரபல தொழிலதிபரான சோஹைல் கத்தூரியாவை காதலிப்பதாக சொன்னதுமட்டுமின்றி, அவருடன் சேர்ந்து பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் முன்னே விதவிதமான போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்தார்.

இந்நிலையில் டிச.4அன்று ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கோட்டையில் அரச பாணியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு மூன்று நாட்களாக கோட்டை அலங்கரிக்கப்பட்டது. அக்னியை ஹன்சிகாவும், சோஹைலும் 7 முறை சுற்றிவந்து மணம் முடித்தனர். ஹன்சிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களைப் பதிவிட்டார். பல பாலிவுட் பிரபலங்கள் இவரது திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகையும், உடற்பயிற்சியாளருமான மந்திரா பேடி, 'உங்கள் இருவருக்கும் பல வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடிகை ஈஷா குப்தா வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:Keerthy suresh: கேஜிஎப் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.