ETV Bharat / entertainment

சினிமா துறைக்கு அரசு உதவிகள் செய்யவில்லை - ஆர்கே செல்வமணி

சினிமா துறையை தொழில்துறையாக அறிவித்த அரசு, அதற்கான எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என இயக்குனர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 8, 2022, 7:30 AM IST

அரசு சினிமா துறைக்கு உதவிகள் செய்யவில்லை

சென்னை: ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சத்யதேவ் பேசும்போது, ‘'இந்த படம் எனக்கு ஒரு மறுபிறவி என்று சொல்லலாம். இந்தப் படத்திற்காக தான் நான் நீண்ட நாட்கள் காத்திருக்கிறேன்'' என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறும்போது, “இயக்குநர் தனசேகரன் என்னுடன் சென்னை-28, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு துறையில் இணைந்து பணியாற்றினார். ஆனாலும் அவருக்குள் இயக்குநராகும் கனவு இருந்துகொண்டே இருந்தது. பொதுவாகவே ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் டைரக்சன் ஆசை உள்மனதில் இருக்கும். ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்டி நட்ராஜ் கூட அவருக்குள் இருக்கும் நடிகராகும் ஆசையால் தான் மிகப்பெரிய வாய்ப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு இங்கே நடிகராக வந்து சாதித்துள்ளார்” என்று கூறினார்.

இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசும்போது, “இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்று கூறினார்.

நடிகை பூனம் பஜ்வா பேசும்போது, “இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்கு பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கு நல்ல மனிதர்” என்றார்.

பாடலாசிரியர் வெள்ளத்துரை பேசும்போது, “ஜல்லிக்கட்டுக்காக நான் எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டுத் தான் இந்த படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நான் எழுதிய செக்கசெவந்த சுந்தரிகள் என்கிற பாடலுக்கு இந்த கதாநாயகிகள் ஆடியதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக மேட்ச் ஆகிவிட்டது நன்றாகத் தெரிகிறது” என்றார்.

நடிகர் ராம்கி பேசும்போது, “கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார்.

எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

மாஸ் ஹீரோக்கள் விரும்பும் கேமராமேனாக இருக்கிறார் நட்டி. இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்பதால் பல பேர் நடிப்பு பக்கம் கிளம்பி விட்டார்கள். காரணம் நடிகர்கள் கையில்தான் சினிமா இருக்கிறது. என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச்சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும்.

சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை. என்று கூறினார்.

நடிகர் நட்டி பேசும்போது, “ஒரே நாளில் நடக்கும் கதை தானே சிட்டிக்குள்ளேயே இந்த படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம் என்றார்.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷாவின் காலில் கட்டு.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.