ETV Bharat / entertainment

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயம்! - 60 சவரன் தங்க வைர நகைகள் மாயம்

திரைப்பட பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Gold
விஜய்
author img

By

Published : Mar 31, 2023, 12:34 PM IST

சென்னை: பிரபல திரைப்பட பாடகரான யேசுதாஸின் மகன், விஜய் யேசுதாஸ்(44). இவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் யேசுதாஸின் வீட்டிலிருந்து சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் சில வைர நகைகள் காணாமல் போனதாக, அவரது மனைவி தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தங்களது வீட்டின் லாக்கரில் சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும், கடந்த மாதம் 18ஆம் தேதி நகைகளை எடுக்கச் சென்ற போது, லாக்கரில் வைத்திருந்த நகைகள் மாயமானது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன நகைகள் குறித்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும், நகைகள் மாயமானதில் தனது வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 150-க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு, வீட்டின் பணியாளர் மற்றும் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திரைப்பட பாடகர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

திரைப்பட பாடகரான விஜய் யேசுதாஸ், 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்', 'மலரே மலரே' போன்ற பல பாடல்களை பாடி பிரபலமானவர். நடிகர் தனுஷின் மாரி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். படைவீரன் என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் மாறுது.. அவசியம் படிங்க மக்களே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.