ETV Bharat / entertainment

இன்று ஒரே நாளில் 4 திரைப்பிரபலங்கள் மறைவு - திரையுலகினர் வருத்தம்! - latest cinema news

Dec 27 2023 deaths in Tamil Film Industry: ஜாலி பாஸ்டியன், கடையம் ராஜு,ஜெய்சன், சண்டைப் பயிற்சியாளர் ஜூனியர் சோமு என்கிற எஸ்.எஸ்.கோபால் ஆகிய 4 திரைப்பிரபலங்கள் இன்று ஒரே நாளில் காலமான செய்தி திரையுலகில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 4:26 PM IST

சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான ஜாலி பாஸ்டியன் (57), நேற்று (டிச.26) இரவு மாரடைப்பால் காலமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஜாலி பாஸ்டியன், பெங்களூருவில் பிறந்து வளர்ந்துள்ளார். திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொத்தம் 900 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.

சமீபத்தில் வெளியான லாக்டவுன் டைரி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். கிறிஸ்துமஸ் விழாவிற்காக குடும்பத்தோடு கேரளாவின் ஆலப்புழாவிற்குச் சென்ற ஜாலி பாஸ்டியன், நேற்று இரவு 9 மணி அளவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோரது படங்களில் இருந்து பணியாற்றி, 25 ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளராக இருந்த கடையம் ராஜு காலமாகியுள்ளார். உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (டிச. 27) காலை 7 மணியளவில் அவர் காலமானார்.

ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ஜெய்சன், இன்று காலை மாரடைப்பு காரணமாக சிம்ஸ் மருத்துவமனையில் காலமானார். நடிகர்கள் பிரபு, பாண்டியன், டி.ராஜேந்தர் காலகட்டங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய ஜூனியர் சோமு என்கிற எஸ்.எஸ்.கோபால், இன்று காலை 11 மணி அளவில் காலமானார். மறைந்த மூத்த ஸ்டண்ட் இயக்குனர் சோமுவின் மகனும், ஆக்சன் பிரகாஷின் தந்தையுமான ஜூனியர் சோமு என்கிற எஸ்.எஸ்.கோபால் வயது மூப்பு காரணமாக மறைந்துள்ளார்.

இவர் 80 காலக்கட்டங்களில் நடிகர் பாண்டியன் நடிப்பில் வெளிவந்த வலது காலை வைத்து வா, நடிகர் பிரபு நடிப்பில் வெளிவந்த இவர்கள் வருங்கால தூண்கள், மங்கள நாயகன், கொலுசு உள்ளிட்ட திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.

இதையும் படிங்க: "என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" - நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.