ETV Bharat / entertainment

இதுபோன்ற படம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும்... கணம் குறித்து ஷர்வானந்த் - ட்ரீம் வாரியர்ஸ்

இதுபோன்ற படம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும், இந்தக் கதை என்னைத் தேடி வந்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்று கணம் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஷர்வானந்த் தெரிவித்துள்ளார்.

கணம் குறித்து ஷர்வானந்த்
கணம் குறித்து ஷர்வானந்த்
author img

By

Published : Aug 26, 2022, 2:54 PM IST

புதுமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கணம்' படத்தில் அமலா, ஷர்வானந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

இப்படம் குறித்து ஷர்வானந்த் கூறும்போது, 'எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. ஆகையால், சுமார் கடந்த 10 ஆண்டுகளாக பிரபுவுடன் தொடர்பிலேயே இருந்தேன். வெவ்வேறு விதமான கதைகளுக்கு இயக்குநர்களை ஊக்கப்படுத்தி வாய்ப்பளித்து வருகிறார். எங்களைப் போன்றோர்களுக்கு இவரைப் போன்று தயாரிப்பாளர்கள் தான் தேவை. அவருடைய நிறுவனம் ஒரு தொழிற்சாலை போன்று செயல்படுகிறது. ஆகையால், தான் வித்தியாசமான சிறந்த படங்களை கொடுக்க முடிகிறது.

டைரக்டர் ஸ்ரீ இந்த கதையைக் கூறும்போது அமலா மேடம் தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறினேன். அமலா மேடம் கதை கேட்டதும் ஒப்புக்கொண்டார். தமிழில் நிறைய கற்றுக்கொண்டேன். இதுபோன்ற படம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும். இப்படி ஒரு கதையை எழுதியதற்கு, அவர் அம்மாவிடம் இருந்த அன்பு தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

இதுபோன்ற படம் 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும்

சைஃபை படமாக பார்த்தாலும் நன்றாக இருக்கும், அதை விடுத்து அம்மா சென்டிமென்ட் என்று பார்த்தாலும் அனைவருக்கும் நெருக்கமான படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ஸ்ரீகார்த்திக் நடித்துக்காட்டுவார். அப்போது நான் ஏன் இப்படி எழுதுனீர்கள் என்று கேட்டேன். எனது அம்மா இப்படித்தான் இருப்பார் என்று கூறுவார். ஒவ்வொரு காட்சியையும் அவரின் அம்மாவை நினைத்தே எழுதியிருக்கிறார்.

நாம் எந்த உணவு உண்டாலும், அதே உணவை அம்மா கையால் சமைத்து அம்மா ஊட்டிவிடும்போது அந்த உணர்வே வேறாக இருக்கும், அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் அவர்களின் அம்மாவை சம்பந்தப்படுத்தும். எனக்கும் அப்படித்தான் என் அம்மாவை சம்பந்தப்படுத்தியது. இதுவரை நான் கமர்ஷியல் படங்களில் தான் நடித்திருக்கிறேன்.

பொதுவாக ஒரு நடிகருக்கு இதுபோன்ற ஒரு கதையில் நடிப்பதற்கு பாதுகாப்பற்றத் தன்மை இருக்கும். ஆனால், இந்த கதையின் மீதும், அந்த உணர்வின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதை என்னைத் தேடி வந்ததில் பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: வெளியானது பகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.