ETV Bharat / entertainment

'ஃபால்' சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லராக இருக்கும் - நடிகை அஞ்சலி - cinema news

'ஃபால்' வெப் சீரியஸ் சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லராக இருக்கும் என நடிகை அஞ்சலி கூறினார்.

’ஃபால்’ சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லராக இருக்கும்

author img

By

Published : Dec 9, 2022, 4:06 PM IST

சென்னை: இயக்குநர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத்தொடர் ’ஃபால்’ இந்தத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாது சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த தொடருக்கு அஜீஷ் இசையமைத்துள்ளார். கிஷன்.சி.செழியன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஃபால் இணையத் தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஞ்சலி, சந்தோஷ் பிரதாப், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்பிபி சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசுகையில், ’இந்தப் புயலிலும் ஒரு நல்ல விஷயம் உள்ளது. அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டில் இந்த வெப் சீரிஸை காண்பார்கள். நட்சத்திர நடிகர்கள் நிறைந்த இக்கதையில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்த வெப் சீரிஸில் கோரமான காட்சிகள் இல்லாமல் த்ரில்லர் கதையாக இருக்கும்’ எனக் கூறினார்.

நடிகை அஞ்சலி பேசுகையில், 'எனக்கு இது ஒரு வித்தியாசமான கேரக்டர். த்ரில்லர் கதை பிடித்தவர்களுக்கு ’ஃபால்’ வெப் சீரிஸ் சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லராக இருக்கும். சித்தார்த் ராமசாமி மிகவும் வேகமாக வேலை செய்யக்கூடிய இயக்குநர். அவரே கேமரா மேனாக இருப்பதால் எங்களுக்கும் வேலை மிச்சம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத் தயாரிப்பில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை நன்றாக பார்த்துக்கொண்டனர். அஜீஷின் இசை இந்த வெப் சீரிஸை மேம்படுத்தும் நோக்கில் உள்ளது. அனைவரும் முதல் எபிசோட் பார்த்து தங்கள் கருத்துகளை கூறுங்கள்’ என்றார்.

'ஃபால்' சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லராக இருக்கும் - நடிகை அஞ்சலி

ஃபால் இணையத்தொடர் இன்று (டிச.9) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.