ETV Bharat / entertainment

ரோலிங் ஸ்டோன் முதல் செஸ் ஒலிம்பியாட் வரை - 'என்ஜாயி எஞ்சாமி' சர்ச்சை - arivu instagram

பாடகர்கள் தீ, 'தெருக்குரல்' அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் கூட்டணியில் உருவான ”என்ஜாயி எஞ்சாமி” பாடலின் சர்ச்சை குறித்த முழு விவரம் அடங்கிய தொகுப்பு...

ரோலிங் ஸ்டோன்  முதல் செஸ் ஒலிம்பியாட் வரை ”என்ஜாய் எஞ்சாமி” சர்ச்சை

author img

By

Published : Aug 1, 2022, 9:29 PM IST

பாடகர்கள் தீ, 'தெருக்குரல்' அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் கூட்டணியில் இண்டிபெண்டென்ட் ஆல்பமாக உருவான ”என்ஜாயி எஞ்சாமி” பாடல் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது.

தொடர்ந்து சமூகப்பிரச்னைகள் குறித்து பாடி வந்த அறிவின் இந்தப் பாடலிலும் ஆதித்தமிழர்கள், இயற்கை வளம், முன்னோர்களின் வாழ்வியல் குறித்து பாடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப்பாடல் உலக அளவில் பெரும் ஹிட் அடித்தது.

”என்ஜாயி எஞ்சாமி” பாடல் வெளியான சில நாட்களிலேயே பட்டிதொட்டி எங்கும் பரவத்தொடங்கியது. இண்டிபெண்டென்ட் இசையமைப்பாளர்களுக்கென ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய 'மாஜா' தளத்தில் வெளியானது. இந்தப்பாடல் தற்பொழுது வரை யூ-ட்யூபில் 429 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

பா.ரஞ்சித் ட்வீட்: "என்ஜாயி எஞ்சாமி" பாடல் போலவே இண்டிபெண்டென்ட் ஆல்பமாக வெளியான ’நீயே ஒளி’ பாடலும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், இந்த இரண்டு பாடல்கள் குறித்து, ரோலிங் ஸ்டோன் பத்திரிகை கவர் ஸ்டோரி ஒன்றை உருவாக்கியது.

இதற்காகப் பாடகி தீ, ’நீயே ஒளி’ பாடலில் இடம்பெற்றுள்ள ராப் பாடகர் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோரிடம் பேட்டி எடுத்து, கவர் ஸ்டோரியில் அவர்களது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

புறக்கணிக்கப்பட்ட அறிவு
புறக்கணிக்கப்பட்ட அறிவு

ஆனால், என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு முக்கியக்காரணமாக இருந்த 'தெருக்குரல்' அறிவின் படம் இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையைக்கிளப்பியது. இதுகுறித்து அறிவு ஒதுக்கப்படுகிறார் என பா. ரஞ்சித் ட்வீட் செய்தார். அதில், "என்சாயி எஞ்சாமி, நீயே ஒளி பாடல் எழுதி பாடிய தெருக்குரல் அறிவு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளார். ரோலிங் ஸ்டோன் இந்தியா ஏன் இப்படிச்செய்கிறது" எனக் கேள்வி எழுப்பினார்.

பா.ரஞ்சித் ட்வீட்
பா.இரஞ்சித் ட்வீட்

செஸ் ஒலிம்பியாட் சர்ச்சை: இதுமட்டுமின்றி ஸ்பாடிஃபை சார்பில், புகழ்பெற்ற டிஜே-வான டிஜே ஸ்னேக் குரலில் 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிடப்போவதாக அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பிலும் அறிவின் பெயர் இடம்பெறவில்லை. டிஜே ஸ்னேக் மற்றும் தீ-யின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றன.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்

மேலும், இதற்காக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் திரையிடப்பட்ட விளம்பரத்திலும் அறிவு இன்றி, டிஜே ஸ்னேக் மற்றும் தீ-யின் படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்த விளம்பரமும் பேசுபொருளாக ஆனது.

இதனைத்தொடர்ந்து தற்போது இறுதியாக, சில நாட்களுக்கு முன் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ’என்ஜாயி எஞ்சாமி’ பாடலை பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் பாடினர். இதிலும் தெருக்குரல் அறிவு ஒதுக்கப்பட்டாரா எனக்கேள்விகள் எழத்தொடங்கின.

அறிவின் பதிவு: இந்நிலையில் ’என்ஜாயி எஞ்சாமி’ பாடலின் சர்ச்சை குறித்து இதுவரை பேசாமல் இருந்த தெருக்குரல் அறிவு இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

”இந்தப் பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இந்தப்பாடலை எழுத யாரும் எனக்கு மெட்டு தரவில்லை. ஒரு வார்த்தைகூட தரவில்லை. இதற்காக 6 மாதங்கள் ஒழுங்காக உறங்காமல் பாடுபட்டு உழைத்துள்ளேன்.

நம் பொக்கிஷத்தை நாம் தூங்கும்போது யார் வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். ஆனால், முழித்திருக்கும் போது அது முடியாது. இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்” எனப் பதிவிட்டிருந்தார்.

அறிவின் பதிவு
அறிவின் பதிவு

அறிவின் இந்தப்பதிவு ரசிகர்கள் மத்திய பல கேள்விகளை எழுப்பிய நிலையில், சர்ச்சைகளுக்குப்பதில் கொடுத்துள்ளார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணனின் பதில்: அறிவின் இந்தப்பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளார். அதில், ”இந்தப் பாடலின் ஐடியாவை 2020ஆம் ஆண்டின் இறுதியில் முதலில் தீ தான் என்னிடம் சொன்னார். அதற்குப்பின்னர் நான், தீ மற்றும் அறிவு ஆகிய நாங்கள் இணைந்து கலையின் மீதுள்ள பெரும் காதலுடன் இந்தப் பாட்டைப் படைத்தோம். என்னுடன் சேர்ந்து தீ இசையமைக்க, அறிவு பாடல் வரிகள் எழுதினார்.

இயக்குநர் மணிகண்டன், அந்தப் பாட்டிற்கான பிரத்யேக வார்த்தைகளைத் தருவதற்கும், உண்மையில் நடந்த சம்பவங்கள் மற்றும் பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை அறிவுடன் பகிர்ந்து, அவருக்கு வரிகள் எழுத உதவி செய்தார். அறிவு வெளிநாட்டில் இருந்ததால் தான் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அவர் இல்லாமல் தீ, பாடகி மாரியம்மாளுடன் இணைந்து ‘என்சாயி எஞ்சாமி’ பாடல் பாடப்பட்டது.

மேலும், இந்த ‘என்சாயி எஞ்சாமி’ பாடல் குறித்து யார் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பொதுவெளியிலேயே பதிலளிக்கத் தயாராகியுள்ளேன்” எனப் பதிலளித்துள்ளார்.

ஆனால், அறிவு வெளியிட்டிருந்த பதிவில், செஸ் ஒலிம்பியாட்டில் புறக்கணிக்கப்பட்டது குறித்தோ, அதற்குக் காரணம் குறித்தோ எதையும் குறிப்பிடவில்லை.

இதையும் படிங்க: புகை பிடிக்கும் காட்சி : நீதிமன்றத்தில் ஆஜராக தனுசுக்கு விலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.