ETV Bharat / entertainment

மீண்டும் மோதும் கார்த்தி - சிவகார்த்திகேயன்; இம்முறை வெற்றி யாருக்கு? - diwali Clash

இந்த ஆண்டு தீபாவளிக்கு மோதவுள்ள ”பிரின்ஸ்” மற்றும் ”சர்தார்” படங்கள் குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

மீண்டும் மோதும் கார்த்தி சிவகார்த்திகேயன்  இம்முறை வெற்றி யாருக்கு

author img

By

Published : Oct 20, 2022, 3:46 PM IST

தீபாவளி பண்டிகைக்கு இனிக்க இனிக்க பலகாரங்களும், இன்பம் பெருக உறவினர்களும், நண்பர்களும் கூடி பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும் சினிமா பிரியர்களுக்குப் புதுப்படம் பார்க்காமல் பண்டிகை முழுமை பெறாது எனலாம். பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் தன்னுடைய ஆஸ்தான நடிகரின் படத்திற்குச் சென்றால் மட்டுமே ஆட்டம் பாட்டத்துடன் அந்த பண்டிகை களைக்கட்டும்.அப்படிப்பட்ட பண்டிகை ரிலீஸ் கொண்டாட்டங்கள் எல்லாம் கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காணாமல் போனது. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் தீபாவளியையொட்டி வெளியாகின்றன.

பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்தி முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதனைத் தொடர்ந்து ’நான்‌ மகான் அல்ல’ , ’பையா’ , ’ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக உருவெடுத்தார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற கவலையிலிருந்த ரசிகர்களுக்கு கார்த்தி படம் வெளியாகிறது என்ற செய்தி சற்று மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் கார்த்தி எப்போதும் நல்ல படங்களையும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் படங்களை மட்டுமே கொடுப்பார் என்ற நம்பிக்கை தான்.

இந்த ஆண்டு கார்த்திக்கு வெற்றிகரமாக ஆண்டாக அமைந்ததுள்ளது. மூன்று மாத இடைவெளியில் மூன்று படங்கள் வெளியாகின்றன. முதலில் வெளியான வெளியான ’விருமன்’ படம் ஓரளவு வெற்றியை பெற்றது. அடுத்து வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போதுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து இந்த தீபாவளிக்கு ’சர்தார்’ வெளியாகிறது.

கார்த்திக்கு இதுவரை மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாகியுள்ளன. 2013ஆம் ஆண்டு ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படம் வெளியானது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை ‌. அஜித்தின் ’ஆரம்பம்’, விஷாலின் ’பாண்டிய நாடு’ ஆகிய படங்கள் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகின. இதில் ஆரம்பம், பாண்டிய நாடு ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.

அடுத்து 2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு தனுஷின் ’கொடி’ படத்துடன் தனது ’காஷ்மோரா’வை இறக்கினார் கார்த்தி. படம் காமெடியாக இருந்தாலும் ஓடவில்லை. இரண்டாவது முறையும் தோல்வியைச் சந்தித்தார் கார்த்தி.

2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜயின் ’பிகில்’ படம் வெளியானது. கூடவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’கைதி’ வெளியானது. ’பிகில்’ வசூலில் சக்கைப்போடு போட்டது. ’கைதி’ லோகேஷ் கனகராஜின் சூப்பரான திரைக்கதை மற்றும் கார்த்தியின் அட்டகாசமான நடிப்பால் சூப்பர் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது முதல் தீபாவளி வெற்றியை பெற்றார் கார்த்தி. ரசிகர்களுக்கும் ’கைதி’ என்ற அற்புதமான படமும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தனது ’சர்தார்’ படம் மூலம் மீண்டும் தீபாவளி பந்தயத்தில் குதிக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடுபவரும் சளைத்தவர் அல்ல. சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படத்துடன் மோதுகிறார் கார்த்தி. இதற்கு முன்‌ சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ படத்துடன் கார்த்தியின் ’தம்பி’ படம்‌ மோதியது. இதில் ’ஹீரோ’ வெற்றிபெற்றார்.

இம்முறை மீண்டும் இருவரும் மோதுகின்றனர். ’பிரின்ஸ்’ திரைப்படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக இருந்தது. ஆனால் அப்போது கார்த்தியின் ’விருமன்’ வெளியாக இருந்ததால் தள்ளிப்போனது. ஆனால் இம்முறை இருவரது படங்களும் மோதிக்கொள்கின்றன.

சிவகார்த்திகேயனைப் பொறுத்த வரையில் இதுதான் இவரது முதல் பண்டிகை ரிலீஸ் படம். இதற்கு முன் இவர் படம் எதுவும் தீபாவளி, போன்ற எந்தவித பண்டிகை நாட்களிலும் வெளியானதில்லை. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்‌.

என்னதான்‌ தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியானாலும் வழக்கமாக வெளியாகும் அஜித், விஜய் படங்கள் இல்லாதது ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளர் யார் என்று.

இதையும் படிங்க: ஷாருக்கான் பிறந்தநாள் பரிசாக வெளியாகிறது பதான் டீஸர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.