ETV Bharat / entertainment

'விழித்தெழு' திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்

ஆன்லைன் சூதாட்டம் குறித்த 'விழித்தெழு' (Vizhithezhu) திரைப்படத்தின் ட்ரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 3, 2023, 10:46 PM IST

சென்னை: ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விழித்தெழு'(Vizhiththezhu). இத்திரைப்படத்தை சி.எம்.துரை ஆனந்த் தயாரித்துள்ளார். மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப்பகுதிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

கதாநாயகனாக முருகா படத்தில் நடித்த அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ, பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம், நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தயாரிப்பாளர் சி.எம்.துரை ஆனந்த், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பருந்துப் பார்வை பத்திரிகையாளராக நடித்துள்ளார். படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன. இப்படத்தின் இசையமைப்பாளர் நல்லதம்பி கதைக்கேற்றபடி அழகாக இசையமைத்துள்ளார்.

படத்தின் எடிட்டிங் எஸ்.ஆர்.முத்துக்குமார், ஸ்டண்ட் எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடனம் ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா இன்று (ஜன.3) நடந்தது. மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் ட்ரெய்லரை வெளியிட்டனர். ஆன்லைன் சூதாட்டம் பற்றி பேச வந்திருக்கும் இந்தப் படம் காலத்துக்கேற்ற ஒரு படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'ஆரம்பிக்கலாமா..' கட்சி நிர்வாகிகளை விருந்துக்கு அழைத்த கமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.