ETV Bharat / entertainment

வாத்தி படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெறுவார் - பாரதிராஜா - dhanush vaathi movie review

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள வாத்தி படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெகுவாக பாராட்டியுள்ளார்.

director bharathiraja wishes dhanush vaathi movie

author img

By

Published : Feb 20, 2023, 5:11 PM IST

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகிய வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. அதே நாளில் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் நடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இந்தப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இரண்டு மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாத்தி படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பாரதிராஜா, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என் திரையுலக பயணத்தில், எத்தனையோ மைல் கல்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்தும் நின்றிருக்கிறேன். அப்படி நான் ஸ்தம்பித்து நின்ற இடம் தான் ‘வாத்தி’. எத்தனையோ படங்கள் பார்க்கிறேன். அதில் இந்த படம் ஸ்பெஷல். இந்த படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் இரண்டு காட்சிகளில் நடித்துள்ளேன்.

ஊடகம் என்பது பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் கூட, மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஊடகம் தான் வாத்தி. கல்வி என்பது இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை வலியுறுத்தி சொல்கிறது இந்த வாத்தி. இதில் நடித்துள்ள தனுஷ் என் மகன் போன்றவர்.

அவர் பொழுதுபோக்கிற்காக படம் நடித்தாலும் கூட அதில் சமுதாய நோக்கத்துடன் செயல்படுபவர். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை கிடைப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். அவர் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன், சிந்தனையாளன். இந்த படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனியின் நடையும், அந்த உயரமும், கம்பீரமும், நடிப்பும் பார்க்கும்போது திரையுலகம் எத்தனையோ முத்துக்களை கண்டிருக்கிறது. அதில் சிறந்த முத்து இந்த சமுத்திரக்கனி. எத்தனையோ கனிகள் இருக்கிறது இல்லையா ? அதில் சிறந்த கனி சமுத்திரக்கனி. ஜி.வி. பிரகாஷ் இசையில் எல்லா பாடல்களும் இனிக்கின்றன.

அவரெல்லாம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நானும் ஜி.வி. பிரகாஷ் உடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட இணைந்து நடித்துள்ளோம். இந்த படத்தில் மட்டுமல்ல பல படங்களில் நான் அவரை கவனித்து வருகிறேன். இந்த வருடத்தில் அவரது இசைக்கும் நடிப்புக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வாத்தி ஒரு நல்ல டைட்டில். ஒரு வாத்தியாரின் சமூக பொறுப்பு என்ன என்பதை அழகாக சொல்லி இருக்கிறது. இந்தப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தபோது, அவர்களது கரகோஷம், அவர்கள் படத்தை ரசித்த விதமெல்லாம் பார்க்கும்போது, சமீப நாட்களில் வெளியான ஒரு சிறந்த படம் என்று சொல்வேன்.

நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்பதற்காக சொல்லவில்லை. வாத்தி திரைப்படம் ஒவ்வொருவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டிய படம். ரசிகர்கள் இந்த படத்தைக் திரையரங்கிற்கு சென்று பார்ப்பார்கள் பார்த்துவிட்டு இந்த பாரதிராஜாவுடன் அதுபற்றி உரையாடுவார்கள்.. வாத்தி படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: BAFTA awards 2023: ஜெர்மனி படத்திற்கு 7 விருது! விருதை கோட்டை விட்ட இந்திய இயக்குனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.