ETV Bharat / entertainment

'பாக்யராஜ் எனது சிஷ்யன் என்பதில் எனக்கு தான் பெருமை’ - இயக்குநர் இமயம் பாரதிராஜா! - bhagyaraj age

பாக்யராஜ் எனது சிஷ்யன் என்பதில் எனக்கு தான் பெருமை, என இயக்குநர் பாக்யராஜ் பிறந்தநாள் விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் அளித்த பேட்டி
பாக்யராஜ் அளித்த பேட்டி
author img

By

Published : Jan 7, 2023, 5:28 PM IST

பாக்யராஜ் அளித்த பேட்டி

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் 72 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், பாண்டியராஜன், லிங்குசாமி, கே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,

“எவ்வளவோ நிகழ்ச்சிகளில் மேடைகளில் நான் பேசி இருக்கிறேன். என்னிடம் நிறைய சிஷ்யர்கள் இருந்தனர். நிறைய இயக்குநர்கள் தற்போது உள்ளனர். அதில் துருவ நட்சத்திரம் போல இருப்பவன் பாக்யராஜ். அடிப்படையில் மிகவும் பாசம் உள்ளவன். முதன் முதலில் என்னிடம் உதவி இயக்குனராக சேரும் போது சந்தேகம் இருந்தது. இவன் ஆளைப் பார்த்தால் இப்படி இருக்கிறான் ஆனால் அவனது எழுத்து இப்படி இருக்கிறதே என அசந்து விட்டேன்.

என்னுடைய பெரும்பாலான படங்களுக்கு கதை வசனம் யாராக இருந்தாலும், பாக்யராஜ் வார்த்தைகள் இல்லாமல் இருந்தது இல்லை. எந்த இடத்தில், எந்த வார்த்தையை போட வேண்டும் என அற்புதமாக எழுதுவான். பாக்யராஜ் என்று சொன்னால் அவரது வசனங்கள் தான் எனக்கு நினைவுக்கு வரும். இதுவரை நான் நட்ட செடி எந்த பழுதும் இல்லாமல் வளர்ந்துள்ளது. நட்டது நான் வளர்ந்தது அவன்.

இன்றைக்கு வரைக்கும் என் பெயரை உச்சரிக்காதவன். எங்கள் இயக்குநர் என்று தான் சொல்லுவான். அந்த மரியாதைக்கு தலை வணங்குவேன். இன்னும் இளமையாக இருக்கான். நல்ல கலை குடும்பம். முன்பு போல பேச முடியவில்லை. சினிமா ஒரு அற்புதமான கலை குடும்பம் நாம் எங்கு இருந்தாலும் வந்து கொண்டு சேர்த்து விடுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னும் அந்த ஈரத்துடன் இருக்கிறான் அதுதான் கலைஞன். இன்றும் பாக்யராஜ் வேண்டும் தயாரிப்பார்களுக்கு.

யாரையும் மனம் வருந்தும் படி பேச மாட்டான். 5 நிமிடத்தில் ஒரு காட்சி சொன்னால் எழுதி கொண்டு வந்து விடுவான். என்னுடைய பெரும்பாலான படங்கள் பேசப்பட காரணம், பாக்கியராஜ் தான் இயக்கம் என்பது வேறு. ஆனால் அந்த ஈரம் வேறு. நானே பெருமையாக சொல்லி கொள்ளலாம் பாக்யராஜ் என்னுடைய சிஷ்யன். நான் எப்படி வாழ்த்து சொல்வது என்று தெரியவில்லை.

தெற்கில் சிறந்த எழுத்தாளன் பாக்யராஜ் என்று அனைவருக்கும் தெரியும். அந்த வடக்கும் தெரிய வேண்டும் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு எழுத்தாளன் இருக்கிறான் என்று. சாகாத புகழையும், நீண்ட ஆயுளையும் பெற்று கடைசி வரை உன்னை நான் இந்த உச்சத்தில் தான் பார்க்க வேண்டும்” என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாக்யராஜ் கூறுகையில், “எனது பிறந்தநாளுக்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி. இந்த நேரத்தில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சாராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

மனோகரன் என்ற கராத்தே விளையாட்டு வீரர். வெளிநாடுகளில் எல்லாம் சென்று பல்வேறு பதக்கங்கள் பெற்றவர். அவர் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு நலிவடைந்த நிலையில் உள்ளதாக செய்தித்தாளில் படித்தேன். உதயநிதி ஸ்டாலின் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் 'வாரிசு' படம் வெளியாவதில் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.