ETV Bharat / entertainment

விரைவில் வருகிறதா 'துருவ நட்சத்திரம்'? அப்டேட் கொடுத்த கௌதம் மேனன் - Dhruva Natchathiram release

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

விரைவில் வருகிறதா 'துருவ நட்சத்திரம்'? அப்டேட் குடுத்த கௌதம் மேனன்

author img

By

Published : Aug 2, 2022, 12:02 PM IST

விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் 'துருவ நட்சத்திரம்'. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது. இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மட்டும் எஞ்சியிருந்த சமயத்தில், பொருளாதாரப் பிரச்னை காரணமாக இறுதிகட்ட பணிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

2018ஆம் ஆண்டே இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நான்கு வருடங்கள் கடந்தும் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் பல வருடங்களாக சமூக வலதளங்களில் இன்று வரை தொடர்ந்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இன்ஸ்டாகிராம் பதிவு

இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’The Stars will align’ என்னும் தலைப்புடன் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவின் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படம் வெளியிடுவது குறித்து உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தளபதி 67 அப்டேட்டோடு மீண்டும் வறேன்..!' - லோகேஷ் கனகராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.