ETV Bharat / entertainment

துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்! - துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்

Dhruva Natchathiram Update: கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 7:46 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநராக வலம் வருபவர், கௌதம் மேனன். இவர், சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் கௌதம் மேனன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் 'துருவ நட்சத்திரம்' (Dhruva Natchathiram). 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது.

இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர், சூர்யா. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகுதான் விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கினார். 2017ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது.

ஆனால், இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மட்டும் எஞ்சியிருந்த நேரத்தில், பொருளாதாரப் பிரச்னை காரணமாக இறுதிகட்ட பணிகள் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. துருவ நட்சத்திரம் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்ற தகவலும் உலா வருகிறது. எனவே, திட்டமிட்டபடி எப்படியும் வெளிவந்து விடும் என்கிறனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் படத்தின் டீசரும் வெளியாகி படத்தின்‌ மீதான எதிர்பார்பை குறைய விடாமல் செய்துள்ளன. படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் கட்டாயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், நாளை காலை 11 மணிக்கு படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸை அதகளப்படுத்தும் ஷாருக்கான்... 1,000 கோடி வசூலை நெருங்கும் ஜவான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.