ETV Bharat / entertainment

கல்லூரி மாணவிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய துருவ் விக்ரம் - college culturals

நடிகர் விக்ரம் மகனும், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான துருவ் விக்ரம், கல்லூரி மாணவிகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

கல்லூரி மாணவிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய துருவ் விக்ரம்
கல்லூரி மாணவிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய துகல்லூரி மாணவிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய துருவ் விக்ரம்ருவ் விக்ரம்
author img

By

Published : Sep 24, 2022, 7:44 AM IST

ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்நிலையில் சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022' என்னும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் துருவ் விக்ரம், மாணவிகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

அதன் போது, துருவ் விக்ரமின் பிறந்தநாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற இண்டிபெண்டன்ட் ஆல்பத்தை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி அவரை பாராட்டினர்.

இதனிடையே நேற்று சர்வதேச இதய நாள் என்பதாலும், ஏராளமான இதயங்களை வென்ற துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதாலும், அவர் எழுதிய ’மனசே..’ என்னும் பாடல் பாடியது பொருத்தமானது என மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திவ்யபாரதியுடன் ஜோடி சேர்ந்த கதிர் - ஓ... இதுதான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.