ETV Bharat / entertainment

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு தொடங்கியது! - priyanka mohan

சத்யஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் தொடங்கியது.

தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு தொடங்கியது!

author img

By

Published : Sep 22, 2022, 6:24 PM IST

Updated : Sep 22, 2022, 11:05 PM IST

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே தொடங்கியது.

கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்த்திரையுலகில் பிரமாண்டமாக, திரையுலகப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இப்படம் தொடங்கியது.

இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு தொடங்கியது!
தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு தொடங்கியது!

இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்ஷன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

பெரும் பாராட்டுக்களை குவித்த 'ராக்கி, சாணிகாயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 'NO GUTS NO GLORY' வெளியானது துணிவு படத்தின் செகண்ட் லுக்!

Last Updated : Sep 22, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.