சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன். G. ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கியுள்ள படம் ’பகாசூரன்’.
செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகிய படம் ’பகாசூரன்’. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆன்லைன் ஆப்களின் மூலம் நடக்கும் பாலியல் குற்றங்களை பற்றி இப்படம் பேசுகிறது. அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள இப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் வருகிற 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். தற்போது அதே அண்ணன் தம்பிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். ஆனால், இம்முறை நடிகராக இதனை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: ட்விட்டரில் சூடுபிடிக்கும் AK-63 படத்தின் அப்டேட் - இயக்குநர் யார்?