நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸான படம், மாரி-2. மாரி முதல் பாகத்துக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ரவுடி பேபி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பாப்புலர் ஆனது.
தனுஷ் மற்றும் தீ(Dhee) பாடிய இப்பாடலை தனுஷே எழுதியும் இருந்தார். பிரபுதேவா நடன இயக்குநராகப் பணிபுரிந்த இப்பாடலில் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடனம் நல்ல கவனம் பெற்றது. இணையத்தைத் துவம்சம் செய்த இந்தப்பாடல், யூ-ட்யூப்பில் மிக விரைவில் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ்ப்பாடல் எனும் சாதனையை அப்போதே படைத்திருந்தது.
அதாவது, வெறும் 17 நாட்களில் 10 கோடி பார்வைகளை அப்பாடல் தொட்டிருந்தது. நான்கு ஆண்டுகளாக இப்பாடல் சாதனையில் இருந்த நிலையில் அண்மையில் வெளியான ’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக் குத்து’ தான் இச்சாதனையை உடைத்தது. விஜயின் அரபிக் குத்து பாடல் வெறும் 12 நாட்களிலேயே 10 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. தற்போது வரை அரபிக் குத்துதான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் தனுஷ் உடைய அந்த ரவுடி பேபி பாடல் யூ-ட்யூப்பில் முடக்கப்பட்டுள்ளது. அப்பாடல் மட்டுமல்லாமல் அதனை வெளியிட்ட wunderbar films சேனலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடக்கம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஹேக்கர்ஸ் யாரும் சேனலை முடக்கினார்களா, முடக்கத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் இணையத்தில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: 'பருந்தாகுது ஊர்க்குருவி' - விருதுகளைக் குவித்த சூரரைப் போற்று!