லிப்ரா தயாரிப்பு நிறுவனரான ரவீந்திரன் சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆனது. பின் இருவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதன் பின் இருவருக்கும் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். ஆனால், ஒருபுறம் ரவீந்திரன் -மகாலட்சுமியின் திருமணத்தை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தயாரிப்பாளர் ரவீந்திரன், “வட இந்தியாவில் என் திருமணத்தை தவறாகப்பேசுகிறார்கள் என்றால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நான் பிறந்த இந்த தென் இந்தியாவில் பேசுவது தான் என் மனவேதனை. அதாவது ஒரு தனிப்பட்ட ஒருவரின் திருமணத்தை விமர்சனம் செய்வதற்கு, உருவம் மட்டுமே காரணமாக இருப்பது மிகுந்த தவறான செயல்.
அதையும் ஒரு சில வணிக ஊடகம் தங்களின் தனிப்பட்ட தேவைக்காக அதனை மேலும் பெரிதாக்குவதைப் பார்க்கும் போது, எல்லாருக்கும் அடுத்தவன் வாழ்க்கை மீது உள்ள அக்கறை எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்.
இந்த மாதிரியான விஷயங்களைப் பார்க்கும்போது மனிதர்கள் மீது இருக்கும் நம்பிக்கை குறையத்தான் செய்கிறது. ஒரு மனிதனை மனிதன் நம்புவதுதான் வாழ்க்கை. ஆனால் அதுவே இங்கு இல்லை எனும் போது வருத்தம் தான் வருகிறது.
ஒரு திருமண புகைப்படத்தை வெளியிட்டால், அதற்கு சந்தோஷப்படாமல், இது எப்படி நடந்திருக்கும் என கேலி செய்வது மனதிற்கு வேதனையாக உள்ளது”, எனத்தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ICAFF திரைப்பட விழா - ’ஷாட் பூட் த்ரீ ’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது