ETV Bharat / entertainment

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார்

உடநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார்.

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார்
பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார்
author img

By

Published : Sep 21, 2022, 1:00 PM IST

டெல்லி: பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா டெல்லியில் உயிரிழந்தார் . அவருக்கு வயது 58. ஆகஸ்ட் 10ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக ராஜு ஸ்ரீவஸ்தவா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் கான்பூரில் பிறந்த இவர், பாலிவுட்டில் ஆரம்ப கட்டத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் நடித்த "மைனே பியார் கியா", "பாசிகர்", "பாம்பே டு கோவா" மற்றும் "ஆம்டி அதானி கர்ச்சா ரூபாயா" போன்ற இந்தி படங்கள் மூலம் பிரபலமாக அறியப்பட்டார்.

இதையும் படிங்க: நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.