ETV Bharat / entertainment

காமெடி நடிகர் 'போண்டா மணி' உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! - போண்டா மணி

காமெடி நடிகர் 'போண்டா மணி' இதயக்கோளாறு காரணமாக, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காமெடி நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : May 26, 2022, 4:44 PM IST

பிரபல காமெடி நடிகர் 'போண்டா' மணி தமிழ்சினிமாவில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி காமெடி நடிகர்களான வடிவேலு, விவேக், கவுண்டமணி என அனைவருடனும் சேர்ந்து பணியாற்றியுள்ளார், 'போண்டா'மணி. இலங்கையைத் தாயகமாகக் கொண்ட 'போண்டா' மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன்.

சினிமாவிற்கு வாய்ப்பு தேடும் காலகட்டங்களில் வெறும் போண்டா, தண்ணீர் கொண்டே பசியாற்றிக்கொள்வாராம், 'போண்டா' மணி. இதனால் இயக்குநர் வி.சேகர் இவருக்கு வைத்த பெயர் தான் 'போண்டா மணி'.

இந்நிலையில், இன்று(மே 26) இதயக்கோளாறு காரணமாக நடிகர் 'போண்டா' மணி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இச்செய்தி திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ’கலைஞரிடம் என் படத்தின் கதையை சொன்னேன்..!’ - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.