நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ’கோப்ரா’. இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் லலீத் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தத் திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூ/ஏ சான்றிதழுடன் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் ‘யானை’