ETV Bharat / entertainment

சினிமா சிதறல்கள்: ஜென்டில்மேன் 2 குறித்த முக்கிய அப்டேட்! - புலவர் ராசு

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் குஷி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, அர்ஜுன் இயக்கும் அடுத்த படம், ஜென்டில்மேன் 2 படத்தின் டைட்டில் லுக் வரை தமிழ் சினிமாவின் இன்றைய அப்டேட்களை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 9, 2023, 7:48 PM IST

Updated : Aug 9, 2023, 7:54 PM IST

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரொமான்டிக் திரைப்படம் 'குஷி'. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா இணைந்து நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'மஜிலி' என்ற படத்திற்குப் பிறகு, இயக்குநர் சிவா நிர்வாணா, சமந்தா கூட்டணியில் இணையும் இரண்டாவது திரைப்படம் 'குஷி' என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புலவர் ராசு மறைவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல்: தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான புலவர் இராசுவின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், முதன் முதலில் அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து, உலகிற்கு பல அரிய வரலாற்று தகவல்களை அளித்தவரும், இன்றும் பல ஆயிரம் விவசாயிகள் பயனடையும் காலிங்கராயன் வாய்க்காலின் வரலாற்றையும், அதன் அறிவியலையும் தரவுகளோடு முதன் முதலில் எழுதியவருமான வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் அய்யா புலவர் இராசு இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த அறிவிப்பை தனது உழவன் ஃபவுண்டேஷன் வாயிலாக அவர் தெரிவித்தார்.

  • தமிழ் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தமளிக்கிறது.

    அய்யாவின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல். #UzhavanFoundation #Karthi pic.twitter.com/0mO8CKBoy7

    — Uzhavan Foundation (@UzhavanFDN) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பான் இந்தியா படம் இயக்கும் அர்ஜுன்: நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15வது படத்தை, அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.

மேலும் கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணன் மகனான நிரஞ்சன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்க உள்ளார். இவர்களைத் தவிர சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு கே.ஜி.எப் படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்குகிறது.

ஜென்டில்மேன் 2 டைட்டில் லுக் வெளியீடு: ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க, இளம் இயக்குநர் A.கோகுல் கிருஷ்ணா இயக்கும் படம், ஜென்டில்மேன் 2. இப்படத்தில் தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜென்டில்மேன் 2 என பெயரிட்டு (Confidence is our trademark) என்றும் குறிப்பிட்டு இருந்தது. இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தை தயாரித்ததும் கே.டி.குஞ்சுமோன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மூன்று புள்ளிகள் இணையும் வான் மூன்று - இந்த வார ஓடிடி ரிலீஸ்

Last Updated : Aug 9, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.