சென்னை: தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் படம் "தருணம்". இந்த படத்தில் முதல் நீ முடிவும் நீ படத்தின் ஹீரோ கிஷன் தாஸ் கதாநாயகனாகவும், ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார். இப்படத்திற்கான பூஜையிடும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டில்லிபாபு, இயக்குனர் கணேஷ், இப்படத்தின் தயாரிப்பாளர் புகழ், இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் கந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், முழுக்க முழுக்க காதலின் தருணங்களை கண் முன் நிறுத்தும் படமாக தருணம் இருக்கும் என தெரிவித்தார். இந்த படத்திற்கான முதற்கட்ட படபிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பிக்கிறது என தெரிவித்த அரவிந்த், டிசம்பர் மாதம் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பான் இந்தியா படமாக இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவர் உடனே அதற்கு ஓகே சொன்னார் என அரவிந்த் ஸ்ரீனிவாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், நடிகர் கிஷன் மற்றும் நடிகை ஸ்மிருதி ஆகியோரின் புதிய கூட்டணியில் இந்த படத்தை இயக்கவுள்ளேன். இந்த படம் கண்டிப்பாக இருவருக்கும் ஒரு பெயர் சொல்லும் படமாக அமையும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த படத்தின் பாடல்களுக்கான பொருப்பை முழுமையாக தர்புகா சிவாவிடம் கொடுத்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். அடுத்தவாரம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர், அரவிந்த் ஸ்ரீனிவாசன், பெரிய ஹீரோக்களுக்கான ஒரு கதை தன்னால் பண்ண முடியாது எனவும் அதற்கென்று ஒரு ஃபார்முலா உள்ளது என்றும் கூறினார். அந்த ஃபார்முலாவில் தன்னால் கதை பண்ண முடியாது எனவும் பெரிய ஹீரோக்களுக்கான படம் பண்ண சந்தர்ப்பம் அமைய வேண்டும் எனவும் கூறினார்.
இவரை தொடர்ந்து மேடையில் பேசிய கிஷன் தாஸ், நடிகை ஸ்மிருதி உடன் இதற்கு முன்பு விளம்பரப்படங்களில் நடித்துள்ளதாகவும் இது தங்கள் கூட்டணியில் முதல் படம் எனவும் கூறினார். அவரை தொடர்ந்து பேசிய நடிகை ஸ்மிருதி முழுக்க முழுக்க காதல் மையமாக உருவாகும் இந்த படத்தில் முத்த காட்சிகள் உள்ளதாகவும் தான் அதில் நடிக்க மாட்டேன் என இயக்குநரிடம் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் வேறு வழி இல்லை படத்தின் கதைக்கு ஏற்பட இருக்கும் சீன்களில் முத்த காட்சிகளை தவிற்க முடியாது என இயக்குநர் திட்டவட்டமாக கூறிவிட்டார். அதனால் நடித்தேன் என ஸ்மிருதி கூறினார்.
இதையும் படிங்க: இடம், தேதி குறிச்சாச்சு.. 10, +2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!