ETV Bharat / entertainment

மிஷ்கினை கொலை செய்யத் தோன்றுகிறது - நடிகர் விஜய் ஆண்டனி 'லக லக'பேச்சு!

பாலாஜி குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'கொலை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மிஷ்கினை கொலை செய்யத்தோன்றுவதாக படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி நகைப்புடன் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 11, 2023, 8:02 PM IST

சென்னை: பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய மிஷ்கின், “கொலை" படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது எனவும்; சினிமா என்பது கூத்து கலையில் இருந்துதான் வந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த கலையை புரிந்து ஒரு படத்தை உருவாக்குபவர்கள் குறைவு என குறிப்பிட்ட அவர், என்னிடம் பலரும் கிண்டலாக கேட்கும் கேள்வி அடுத்த என்ன கொலை படமா சார் என்பதுதான் எனத் தெரிவித்தார். அப்படி வெறும் கொலை என்ற வார்த்தைக்குள் என் படங்களை சுருக்கி விட்டார்கள் என மிஷ்கின் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டிலுக்காக இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார் எனக்குறிப்பிட்ட மிஷ்கின், ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்றுதான் யோசிப்பான் எனவும் கூறினார்.

மேலும், ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மிஷ்கின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை பற்றி பேசப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் கொலை பற்றி எழுதப்பட்டுள்ளது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும் எனக்கூறினார்.

அந்த வகையில், இப்படி ஒரு படத்தைக் கொடுத்துள்ள இயக்குநர் பாலாஜிக்கு நன்றி எனவும் மிஷ்கின் தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்ற படங்களை இயக்குநர் பாலாஜி உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த மிஷ்கின் பலரிடம் தன்னிடம் ரொமான்டிக் படம் எடுக்கமாட்டீர்களா என கேட்பதாகவும், அதில் தனக்கு ஆர்வம் இல்லை எனவும் மிஷ்கின் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய விழாவின் கதாநாயகன் நடிகர் விஜய் ஆண்டனி, “கொலை" படத்தின் நல்ல கன்டன்ட் போலவே இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்துள்ளது எனக்கூறினார்.

மேலும் இந்த படத்தின் எடிட்டிங், படத்தொகுப்பு, இசை என அனைத்து தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் எனக்கூறிய விஜய் ஆண்டனி, இயக்குநர் பாலாஜி நிறைய ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய இவர் அதன் தாக்கத்தை கொலை படத்தில் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இயக்குநர் குறித்து ரகசியம் ஒன்றை சொல்வதாக தெரிவித்த விஜய் ஆண்டனி, எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் தான் இயக்குநர் பாலாஜி எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி, இயக்குநர் மிஷ்கின் கொலை படம் குறித்து பேசும்போது, அவரை கொலை செய்ய வேண்டும் எனத் தனக்கு தோன்றியதாகவும்; அந்த அளவுக்கு சிறப்பான பேச்சை அவர் எப்படி வழங்கினார் என தாம் நினைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2026 சட்டப்பேரவைத்தேர்தல்.. பனையூரில் குவிந்த நிர்வாகிகள்... விஜயின் அடுத்த மூவ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.