ETV Bharat / entertainment

ஆர்யாவின் கேப்டன் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு! - apcoming arya movies

ஆர்யா நடிக்கும் கேப்டன் திங்க் ஸ்டுடியோ மற்றும் தீ ஷோ பீப்பில் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் கேப்டன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று (ஏப். 4) வெளியானது.

ஆர்யாவின் கேப்டன் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

author img

By

Published : Apr 5, 2022, 2:36 PM IST

திங்க் ஸ்டுடியோ மற்றும் தீ ஷோ பீப்பில் நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

நடிகர் ஆர்யா, 'டெடி, சார்ப்பட்டா பரம்பரை' போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார்.

அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் 'கேப்டன்' படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. 'டெடி' என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும்படி அமைந்துள்ளது.

இந்தப் ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும்.

தவிர, இந்த சிங்கிள் ஃப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது, ரத்தம் சூடுபிடிக்கும் பரபர த்ரில் சவாரியாக இப்படம் இருக்கும். இந்தத் திரைப்படத்திற்காக ஆர்யா தந்த கடின உழைப்பு, தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆர்யா எனும் அற்புதமான நடிகர் 'கேப்டன்' படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக்குழுவும் சாட்சியமளிக்கிறது, மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட படக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோ நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தீ ஷோ பீப்பில் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

'கேப்டன்' படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் 'The Show People' மற்றும் 'Think Studios' நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இதையும் படிங்க: 'மிஸ்டர் லோக்கலும் நீதிமன்ற வழக்கும்! - இது சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.