ETV Bharat / entertainment

பிக் பாஸ் - 6: என்ன ஆண்டினு கூப்புடுவியா...? தனலட்சுமி VS கோளாறு - பிக் பாஸ் சீசன் 6

இன்றைய எபிசோடின் பிரோமோவில் போட்டியாளர்களை பார்த்தால் ஒவ்வொரு எபிசோடிலும் சமீபத்தில் வெளியான ‘தள்ளுமாலா’ மலையாளப் படத்தைப் போல 5 நிமிடத்திற்கு ஒரு ஃபைட் சீனையே எதிர்பார்க்கலாம் போலும்.

பிக் பாஸ் - 6 : என்ன ஆண்டினு கூப்புடுவியா...? ; தனலட்சுமி VS கோளாறு

author img

By

Published : Oct 21, 2022, 11:04 AM IST

பிக் பாஸ் ஆறாவது சீசனின் 11ஆவது நாளான நேற்று(அக்.20) 10ஆம் நாள் இரவிலிருந்து எபிசோடு தொடங்கியது. லைட் ஆஃப் செய்தபிறகும் வீட்டின் போட்டியாளர்கள் ஆம்லெட் செய்துகொண்டு இருக்க, வழக்கம் போல் நமது அசல் கோளாறு பெண்களிடம் வம்பிழுக்கும் செயலில் ஈடுபட்டார்.

தனலட்சுமி அசல் கோளாறை அண்ணா என்று எப்போதும் போல் கூப்பிட, “என்ன எதுக்கு அண்ணனு கூப்புடுற..? பாக்குறதுக்கு என் பெரியம்மா மாதிரி இருந்துகுட்டு..!” என்று கேட்டதுமே சற்றென கோபமுற்றார் தனலட்சுமி. இருப்பினும் விடாத நமது கோளாறு, “உன்னலாம் பஸர் அமுக்கி கதை சொல்ல விடாம பண்ணிருக்கனும்..!” எனச் சொல்ல வெகுந்தெழுந்தார் தனலட்சுமி. “அன்னைக்கி ஆண்டினு சொல்ற, இன்னைக்கி பெரியம்மானு சொல்ற, நீ யாரு அப்படி சொல்றதுக்கு...!’ என சத்தம் போட்டுப் பேச நடுராத்திரியில் பெரும் வாக்குவாதம் வீட்டில் நிகழத் தொடங்கியது.

இதற்கு வழக்கம் போல் எப்போதும் பஞ்சாயத்தென்றால் ஓடி வரும் நம்ம அஜீம், தனலட்சுமியை இழுத்துக்கொண்டு போனார். வழியில், தூக்கத்தில் எழுந்த விக்ரமன், தனலட்சுமியிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, அதற்கு நம்ம பஞ்சாயத்து தலைவர் அஜீம் வழிமறித்தார். இதனால் விக்ரமன் கோபமடைய, பின் அஜீமிற்கும் விக்ரமனிற்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது.

பின், அதை சமாதானம் செய்ய வந்த ஏடிகே, விக்ரமனை சமாதானப் படுத்துகிறேன் என்கிற பெயரில், “பிரதர் நீங்க அவன்கிட்டையும் என்ன ஆச்சுனு கேளுங்க பிரதர்...! பொண்ணு சைடு மட்டும் கேட்காதீங்க...!” எனக் கூற, ”இது தவறான வார்த்தை. நான் என்ன பொண்ணுங்க சைடு நியாயத்தை மட்டும் பேசுறேனா...?” என அந்த வாக்குவாதம் ஏடிகே Vs விக்ரமனாக மாறியது.

இதற்கெல்லாம் இடையில் நம்ம தலைவர் ஜிபி முத்து இதை சமாளிக்க தன் தலையை விட, பின் விக்ரமனிற்கும் ஜிபி முத்துவிற்கும் சற்று நேரம் வாக்குவாதம் தொடங்கியது. இப்படி எங்கோ ஆரம்பித்த வாக்குவாதம், டிக்-டாக்கில் நமது வடக்கு நண்பர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்து கொள்ளும் காணொலி போல் 20 நிமிடம் தெரிந்தது.

ஆமாம், கண்டிப்பாக மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல மீம் கண்டெண்ட் தான். இதையெல்லாம் விட சற்று நகைப்பூட்டியது என்னவென்றால். சண்டையில், பிக் பாஸ் வீட்டை விட்டு போறேனு தனலட்சுமி கூறினார். பின், இந்த சண்டைக் கலவரங்கள் எல்லாம் கொஞ்சம் அடங்கியதும் மீண்டும் தாமே பிக்பாஸ் கேமரா முன் வந்து, “அப்போ தெரியாம சொல்லிட்டேன்.

அதுக்காகலாம் என்ன வெளிய அனுப்பிறாதீங்க. நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்துருக்கேன்...!” எனக் கூறினார். மேலும், நேற்றைய எபிசோடிலிருந்து கேமரா இருப்பதை ஒவ்வொரு போட்டியாளர்களும் மறப்பதாய் ஒருவரையொருவர் புறம் பேசுவது, நக்கல், கிண்டல், வன்மம் என அனைத்தும் இம்முறை சற்று விரைவாகவே தொடங்கிவிட்டது. இன்றைய எபிசோடின் பிரோமோவில்...., எப்பா....!, இவர்களை விட்டல் ஒவ்வொரு எபிசோடிலும் சமீபத்தில் வெளியான ‘தள்ளுமாலா’ மலையாளப் படத்தைப் போல 5 நிமிடத்திற்கு ஒரு ஃபைட் சீனையே எதிர்பார்க்கலாம் போலும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா..ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் ஆர்மி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.