ETV Bharat / entertainment

நடிகர் வருண் தவானின் ‘பெடியா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு...!

author img

By

Published : Oct 19, 2022, 4:55 PM IST

நடிகர் வருண் தவான் நடித்துள்ள ‘பெடியா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் வருண் தவானின் ‘பெடியா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு...!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான "பெடியா" ட்ரெய்லர் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான 'பெடியா' ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் ட்ரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் வருண் தவானின் 10ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக பெடியா டிரெய்லரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரம்மியமான காடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிபட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது. இந்த நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமான முறையில் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

ட்ரெய்லரில் வருண், கீர்த்தி, தீபக் தோப்ரியல் மற்றும் அபிஷேக் பானர்ஜி இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. தினேஷ் விஜன் தயாரிப்பில் பிரமாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்தப் படத்திற்கு ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

டாப் கன் மேவ்ரிக், மோர்ட்டல் காம்பாட், காட்ஜில்லா Vs காங், மற்றும் ஆட் அஸ்திரா ஆகிய படங்களுக்கு கிராஃபிக்ஸ் செய்த விருது பெற்ற நிறுவனமான எம்பிசி இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது.

ட்ரெய்லரைப் பற்றி இயக்குநர் அமர் கௌஷிக் கூறுகையில், "படத்தில் இடம்பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது," என்றார்.

இயக்குநர் ஸ்ரீஇராம் ராகவன் இயக்கிய ‘பத்லாபூர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வருண் மற்றும் தினேஷ் இணையும் படம் 'பெடியா' என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 'ஸ்ரீ' மற்றும் 'பாலா' படங்களுக்குப் பிறகு ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் இது அமர் கௌஷிக்கின் மூன்றாவது படமாகும்.

படம் முழுவதும் சிரிப்பு மற்றும் திகில் கலந்த பயணமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ட்ரெய்லர் ஏற்படுத்தியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி ஷெட்டி, தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ள ’பெடியா’ வருகிற நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: BB Day 9: எனக்கு Girlfriends கிடையாது...! கோளாறாக வேலை செய்கிறாரா அசல் கோளாறு...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.