நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் "பீஸ்ட்". பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மளையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த 2-ம் தேதி, பீஸ்ட் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தி ட்ரைலர் கடந்த 4-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாராட்டியுள்ளார். தானும் நடிகர் விஜயின் ரசிகர் என்றும், படம் வெற்றி பெற படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பீஸ்ட் இந்தி ட்ரைலர், "மீனர்...லீனர்...ஸ்ட்ராங்கர்..." ஆக உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.