ETV Bharat / entertainment

மீண்டும் வசூல் அவதாரத்தை தொடங்கிய அவதார்; மூன்று நாட்களில் ரூ.3,500 கோடி கலெக்சன் - worldwide box office collection

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகிய 3 நாள்களில் உலக முழுவதும் ரூ.3,598 ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வசூல் வேட்டையில் அவதார்; மூன்று நாட்களில் 3,500 கோடி வசூல்

author img

By

Published : Dec 19, 2022, 10:06 AM IST

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்தானா நடிப்பில் உருவாகிய அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

வெளியாகிய மூன்று நாட்களில் சுமார் 3,598 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் மூன்று நாட்களில் சுமார் 120 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்தியாவில் 'டாக்டர் ஸ்ட்ரேஞ் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸின்' வசூல் சாதனையை முறையடித்துள்ளது.

2009ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது. அதன்பின் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் விருமாண்டி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.