ETV Bharat / entertainment

அரண்மனை 4 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!.. எப்போ படம் ரிலீஸ்? - cinema news

Aranmanai 4: அரண்மனை படத்தின் 3 பாகங்களை தொடர்ந்து நடிகை குஷ்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அரண்மணை 4ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ அடுத்த அதிரடி - அரண்மனை 4 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 1:52 PM IST

சென்னை: எவர் கிரீன் இயக்குநர் சுந்தர்.சி படங்களில் அரண்மனை படம் சீரிஸ்க்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. காமெடி பேய் படங்கள் வரிசையில் அரண்மனை படவரிசைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு. தற்போது மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை நான்காம் பாகம் உருவாகி வருகிறது.

தமிழகமெங்கும் குடும்பங்களை குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாக படக்கு குழு தெரிவித்து உள்ளது.

Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி.

ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர்.சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களை குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும்.

இதையும் படிங்க: நடிகராக மாறிய இயக்குநர் சீனு ராமசாமி.. ரசிகர்கள் வரவேற்பு!

முதல் மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் அதிரடியாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே.பி, விச்சு, கே.ஜி.எப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உள்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்து உள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டு பொங்கல் அன்று அரண்மனை 4ஆம் பாகம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அரண்மனை 4ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.