சென்னை: உலகலவில் புகழ் பெற்று இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வளம் வருபவர் ஏஆர் ரகுமான். இவரது இளைய மகன் ஏஆர் அமீன், தனது தந்தையை போலவே இசை உலகில் சாதிக்க துடிப்பவர். அமீனும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளம் வருகிறார்.
ஏஆர் அமீன் தனது திரை பயணத்தை ஓகே கண்மணி படம் மூலம் தொடங்கினார். இவர் தமிழ், இந்தி போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் பாடியுள்ளார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்திலும் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இந்நிலையில், ஏஆர் அமீன் ஒரு பெரு விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் பென்னி டயாள், மேடையில் பாடிக்கொண்டிருந்த போது, அங்கு பறந்த ட்ரோன் கேமரா ஒன்று எதிர்பாராத விதமாக அவரது பின் கழுத்தில் மோதியது. இதில் அவர் பதற்றமாகி நிலைதடுமாறி கீழே விழுந்த காணொலி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏஆர் ரகுமன் மகன் ஏஆர் அமீன், ஒரு பாடல் ஷூட்டிங்கில் இருந்த போது, மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவர் தபியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனது ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக் கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.
நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரம் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில நொடிகள் முன்னரோ அல்லது பின்னரோ இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் எனது தலையில் விழுந்திருக்கும். நானும் எனது குழுவும் அங்கு தான் இருந்தோம். எங்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை" என குறிப்பிட்டு உள்ளார். இவரது பதிவால் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதற்கு ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஏஆர் அமீன் மற்றும் அவரது குழுவினர் ஒரு அபாயகரமான பேரழிவிலிருந்து தப்பினர். மும்பை ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் இறைவனின் அருளால் எந்த காயமும் ஏற்படவில்லை. நாம் நமது தொழில்துறையை வளர்க்கும்போது, இந்திய செட் மற்றும் இருப்பிடங்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரங்களை நோக்கி நகர்த்த வேண்டும். நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். தயாரிப்பு நிறுவனமான குட்ஃபெல்லாஸ் ஸ்டுடியோஸ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத் தயாரிப்பாளரும், படப்பிடிப்பிற்கான தயாரிப்பு நிறுவனமான குட்ஃபெல்லாஸ் ஸ்டுடியோவின் நிறுவனர் ரிதேஷ் செஜ்பால் கூறும்போது, "இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தோம். ஷூட்டிங்கள் ஒரு பெரிய குழு இருந்தனர். அவர்கள் யாருக்கும் எதுவும் ஆகாததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஷூட்டிங்கிற்கு முன்பு கிரேன்கள் மற்றும் அலங்காரங்கள் பாதுகாப்புடன் தான் இருக்கிறதா என தணிக்கை செய்யப்பட்டன. இருப்பினும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியாக உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: Video: பின்னணி பாடகர் பென்னி தயாளை பதம் பார்த்த ட்ரோன் கேமரா!