பிரகாஷ்ராஜிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் ஆன பிரியா, 'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா' போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கி இருக்கும் வெப் சீரீஸ் ’அனந்தம்’. இதில் பிரகாஷ்ராஜ், அரவிந்த் சுந்தர், இந்திரஜா, சம்பத், ஜான் விஜய் உள்படப் பலர் நடித்துள்ளனர்.
இது, 1951ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ’அனந்தம்’ என்ற வீட்டில் வாழும் 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சென்டிமென்ட் கதை. ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது. அவர் ‘அனந்தம்’ என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார். அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம்தான், இந்தத் தொடரின் கதை.
இதில் முதல் தலைமுறை குடும்பத் தலைவனாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இந்தத்தொடர் வருகிற 22ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் பிரியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து இயக்குநர் பிரியா பேசுகையில், “அனைவரும் உயிரைக்கொடுத்து பணியாற்றியுள்ளோம். இந்த சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றியுள்ளோம். அனைவரும் இதில் நடிக்கவில்லை. வாழ்ந்துள்ளனர். பிரகாஷ்ராஜ் ’வெங்கடேசன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜான் விஜய் மற்றும் சம்பத் இருவருக்கும் நன்றி. இப்படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இதில் பாரதியார் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளோம். இளையராஜாவுக்கு சமர்ப்பணம்” என்றார்.
இதையும் படிங்க: இசைஞானிக்கு வேறுஞானம் இல்லை - ராஜ்கிரண் கருத்து