பாரம்பரிய ’ஃபேஸ் மாப்பிங்’ முறையை பயன்படுத்தியதில், உலகின் மிக அழகிய முகங்களாக ஹாலிவுட் நடிகர்களான ஆம்பெர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016ஆம் அண்டு லண்டனைச் சேர்ந்த மருத்துவரான ஜூலியன் டி சில்வா ‘PHI' எனப்படும் ஃபேஸ் மேப்பிங் முறையைப் பயன்படுத்தி உலகின் மிக அழகிய முகங்கள் யாரென தேர்வு செய்யும் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.
அதன் முடிவுகளில் தற்போது உலகின் மிக அழகிய பெண்மணியாக நடிகை ஆம்பெர் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், உலகின் மிக அழகிய ஆண்மகனாக ‘பேட் மேன்’ திரைப்படத்தில் நடித்த ராபர்ட் பாட்டின்சன் தேர்வாகியுள்ளார்.
இந்த ‘Phi' எனும் முறை கிரேக்க ஃபேஸ் மேப்பிங் முறையாகும். இந்த முறையை பயன்படுத்திய மருத்துவர் சில்வா, ராபர்ட் பாட்டின்சன் இந்த முறைப்படி 92.15 விழுக்காடு பொருந்துவதாகவும், அவரைத் தொடர்ந்து ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ படத்தில் நடித்த ஹென்ரி காவில் 91.64 விழுக்காடுடன் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாகவும், இவரைத் தொடர்ந்த பிராட்லி கூப்பர் மற்றும் பிராட் பிட் 90.55 & 90.51 விழுக்காடுகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தி வெளியானது, சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கி விட்டது. சமீபத்தில் தனது முன்னாள் கணவரான நடிகர் ஜானி டெப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆம்பெர் ஹெர்ட் இணையத்திலும், மக்களிடமும் பெரும் பேசுபொருளானார்.
இந்நிலையில், டிசி காமிக்ஸ்-இன் கீழ் வரும் அடுத்த படமான ‘தி ஆக்குவா மேன் 2’ இல் நடிக்கவுள்ளார். மேலும், நடிகர் ராபர்ட் பாட்டின்சன் சமீபத்தில் நடித்து வெளியான ‘பேட் மேன் -2 ‘ பெரும் வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிரின்ஸ்' பட நாயகியின் புகைப்படத் தொகுப்பு..!