நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'.
இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்தப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
‘கடாவர்’ படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய காலகட்டத்திலேயே லட்சக்கணக்கானப் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அமலா பால், தயாரித்து, கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கடாவர்’, ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது.
இதையும் படிங்க: இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்... விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்...