நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலின்படி அஜித் இப்படத்தில் தமிழ்நாடு முழுவதும் உணவு நிறுவனங்கள் நடத்தி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த கேரக்டர் ஒரு சவாலான கேரக்டர் என்றும் ஒரு சாதாரண குடிமகன் கடுமையான உழைப்பு மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து உச்சத்திற்கு செல்லும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
இது சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் அண்ணாச்சி வாழ்க்கையை ஒட்டிய கதை என்றாலும் இக்கதை அது போல் இருக்காது என்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுவதால் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: Powerful people's make powerful films - உதயநிதி பற்றி சிலாகித்த சிவகார்த்திகேயன்!